வழக்கமாக எம்.ஜி.ஆர். படங்கள், புரட்சி வசனங்களும், ஆக்ஷன் பரபரப்பும், தீ பறக்கும் காட்சிகளுமாய் நகரும். ஆனால், அவை அனைத்திற்குள் முற்றிலும் மாறாக, மனித நேயத்தை போற்றும் விதமாக உருவான படம் ‛பல்லாண்டு வாழ்க’.
சாந்தாராமின் ‛தோ ஆன்கி பராஹத்’ என்கிற இந்திப் படத்தின் தமிழ் ரீமேக் தான் பல்லாண்டு வாழ்க.
ஒரு சிறை அதிகாரி, 6 சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்தி அவர்களை மீட்பதே படத்தின் கரு. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார்.
சிறைக் கைதிகளாக, மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், பி.எஸ்.வீரப்பா, எம்.என்.நம்பியார், வி.கே.ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். 1975ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை கே.சங்கர் இயக்கியிருந்தார்.
பாடல்கள், ஒளிப்பதிவு, திரைக்கதை என எல்லா வகையிலும் ரசிகர்களை குஷிப்படுத்தி நல்ல வசூல் வேட்டையை பெற்றது பல்லாண்டு வாழ்க!
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பார்க்கத் திரண்டிருந்த ரசிகர் கூட்டத்திருந்த ஒரு சிறுவனை அழைத்து, எம்.ஜி.ஆர் அன்போடு நலம் விசாரித்தத் தருணம்.