Take a fresh look at your lifestyle.

கோடை விடுமுறையில் வெளியாகும் பேட்டராப்!

நடிகர் பிரபுதேவா நடிக்கும் பேட்டராப் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் பிரபுதேவா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினியாக வேதிகா உட்பட ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறையில் படம் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

– தேஜேஷ்