இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘ஜோஷ்வா – இமைபோல் காக்க’ படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருந்தது.
வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வருண் நாயகனாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019-ம் ஆண்டு முடிந்தது. ஆனால், தவிர்க்க முடியாத சில காரணங்களால் ரிலீஸ் ஆவது தள்ளிப்போனது.
இந்நிலையில் இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே ‘ஜோஷ்வா’ படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது
– தேஜேஷ்