Take a fresh look at your lifestyle.

திருமணம் செய்யாமலே சந்தோசமாக இருக்கின்றேன்!

நடிகை சதா பேட்டி

நடிகை சதா, ‘ஜெயம்’ படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதில் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து எதிரி, அந்நியன், பிரியசகி, வர்ணஜாலம், திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேஷம் உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

2005-ம் ஆண்டு இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்நியன்’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் சதா.

39 வயதான சதா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் திருமணம் செய்துகொள்ளாதது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் அளித்துள்ள பதில்  திருமணம் செய்துக் கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். நான் எனக்குப் பிடித்ததை விரும்பி செய்கிறேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன் என்றார்.

இந்த நிலையில், நடிகை சதா தற்போது புகைப்படங்களை சமூக வளைதளங்களில் வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி வருகிறது.