Take a fresh look at your lifestyle.

ஆர்ஆர்ஆர் படத்தைப் பாராட்டிய ஜேம்ஸ் கேமரூன்!

இயக்குனர் எஸ்.எஸ். ராஜமெளலியின் RRR திரைப்படம் சிறந்த படம் மட்டுமின்றி சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஹாலிவுட் பட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்ற சேட்டர்ன் விருது வழங்கும் விழாவில் ஜேம்ஸ் கேமரூனும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியும் சந்தித்து கொண்டனர்.

அப்போது ராஜமெளலியுடன் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் பேசிய ஜேம்ஸ் கேமரூன், ஆர்ஆர்ஆர் திரைப்படம் குறித்து வெகுவாகப் பாராட்டினார். இதற்கு எஸ்.எஸ்.ராஜமெளலி தனது இன்ஸ்டா பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

– தேஜேஷ்