‘ஜெயிலர்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த், நடித்து வரும் படம், ‘வேட்டையன்’. இது ரஜினியின் 170 -வது படம்.
திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து நெல்லை, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் வளர்ந்துள்ளார், ‘வேட்டையன்’. ‘ஜெய்பீம்’ புகழ் த.ச. ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முடிந்து விடும்.
இதனைத் தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
கமலஹாசனுக்கு புதிய அத்தியாயத்தை எழுதிய ‘விக்ரம்-2’, விஜயின் சந்தையை எகிறச்செய்த ‘மாஸ்டர்’ ‘லியோ’ ஆகிய சினிமாக்களை டைரக்டு செய்த லோகேஷின் படம் என்பதால், ‘ரஜினி 171’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் ரஜினியை மிகவும் இளமையாக காட்ட முடிவு செய்துள்ளார், லோகேஷ் கனகராஜ்.இதற்காக ‘டி-ஏஜிங்’ எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த தொழில் நுட்பத்தின் மூலம் ‘கோட்’ படத்தில் விஜயை இளமையாக படம் பிடித்துள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
-பாப்பாங்குளம் பாரதி.