Take a fresh look at your lifestyle.

அஜித்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் இப்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். இது அஜித்துக்கு 62-வது படம். படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

அஜித் ஜோடியாக திரிஷா நடிக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோரும் உள்ளனர்.

லால் சலாம், வேட்டையன் ஆகிய படங்களைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் விடாமுயற்சி படத்தையும் தயாரிக்கிறது.
அனிருத் இசை அமைக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துணிவு படத்துக்கு பிறகு இயக்குநர் மாற்றம், உலக பைக் ரேஸ் போன்ற காரணங்களால் அஜித் ஓராண்டு நடிக்காமல் இருந்தார்.

விடாமுயற்சிக்கு பிறகு அப்படி ஒரு இடைவெளி இருந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அஜித், தனது 63- வது படத்தை இப்போதே முடிவு செய்து விட்டார்.

அஜித்தின் புதிய படத்தை இளம் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இவர், விஷால் எஸ்.ஜே. சூர்யா நடித்த ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்தை இயக்கும் வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரன் பெற்றுள்ளார்.

‘ஏகே- 63’ படத்தை தெலுங்கு திரைப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.

‘ஏகே- 63’ படத்தின் அலுவலக பூஜை பொங்கல் தினத்தன்று சென்னையில் நடந்துள்ளது.

பூஜையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், படத் தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஆரம்பமாகிறது.

படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். கிரீடம் படத்திற்கு பின் அஜித்துடன் மீண்டும் இணைகிறார், ஜி.வி.பிரகாஷ் குமார்.

உலக பைக் ரேஸ் என்னாச்சு ஜி?

– பாப்பாங்குளம் பாரதி.