Take a fresh look at your lifestyle.

கண்ணதாசன் பேரனுக்கு ஜோடியாகும் வாணி போஜன்!

பரணி சேகரன் இயக்கத்தில், பர்மான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள  ‘தாழ் திறவா’ படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

திகில், மர்மம் கலந்த படைப்பாக உருவாகி வரும் இந்தப் படத்தில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷியாம் பிரசாத், குழந்தை நட்சத்திரங்கள் லிஷா, லலித் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துகள் மற்றும் அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே இப்படத்தின் மையக் கதை.

தமிழில் அகழ்வாராய்ச்சியை மையமாக கொண்டு, அதனுடன் ஹாரர் மற்றும் அமானுஷ்ய அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது.

உலகளவில் திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘தாழ் திறவா’ படத்தின் டீசர் திரையிடப்பட்டது. படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர்களும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

டீசர் மற்றும் இசை வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.