Take a fresh look at your lifestyle.

சூழலுக்கேற்ப மாறிக்கொள்வதில் தவறில்லை!

நடிகை சோபிதா துலிபாலா விளக்கம்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு இருவருமே தற்போது பிசியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோபிதாவிடம் நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார்.

“ஒரு நடிகரை காதலிக்கவோ, திருமணம் செய்யவோ மாட்டேன் என்று உறுதியாக இருந்த நீங்கள், எப்படி நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டீர்கள்?”

இதற்கு பதிலளித்த சோபிதா:

“கருத்துகள் என்பது காலப்போக்கில் மாறிக்கொள்ளும். அப்போதைய சூழலில் அதுதான் சரி எனப்பட்டது. எனவே தான் அந்தக் கருத்தில் தீர்க்கமாக இருந்தேன்.

நாம் மனிதர்கள் தானே… காலப்போக்கில் மாறத்தான் செய்வோம். அந்தவகையில் என்னை மாற்றிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு தான்.

வாழ்க்கை ஒரு வானிலை போல். பருவநிலை மாறும்போது நமது திசையும் மாறும். மனதளவில் உறுதியாக இருந்தால் போதும், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுப்பதில் தவறில்லை” என்றார்.