Take a fresh look at your lifestyle.

ஆகஸ்டில் வெளியாகிறது ‘அஜித் ரேஸ்’ ஆவணப்படம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற கார் பந்தய அணியைத் தொடங்கி, உலகளவில் பல்வேறு தொடர்களில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார்.

இதற்கிடையில், அஜித்குமார் ரேசிங் தொடர்பாக ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற தலைப்பில் புதிய ஆவணப்படம் உருவாகி வருகிறது. இந்த ஆவணப்படத்தை ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த ஆவணப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

ரேசிங் உலகில் அஜித்தின் சாதனைகளை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர்.

‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற தலைப்பில் உருவாகிவரும் நடிகர் அஜித்குமாரின் ரேசிங் ஆவணப் படம் வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.