Take a fresh look at your lifestyle.

கட்-அவுட்கள் வைத்தே கட்சியை வளர்க்கும் தமிழ்நாடு!

விஜய்யை விமர்சித்தாரா பவன் கல்யாண்?

கட்சி தொடங்கிய இரண்டு ஆண்டுகளில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட முதல் முறையிலேயே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தையே ஏற்படுத்தியது.

தமிழக அரசியலில் வரலாற்றுச் சாதனையை உருவாக்கியுள்ள முதலமைச்சர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் என பலர் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல், விஜய் பதவியேற்ற அன்று ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆந்திராவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விஜய் பற்றியும், தமிழக அரசியல் பற்றியும் பவன் கல்யாண் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.

அதில், “தமிழ்நாட்டில் மிக எளிதாக ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள். அதைப் பார்த்தால் எனக்கே பொறாமையாக உள்ளது.

எங்கு பார்த்தாலும் கட்வுட், பேனர்களை வைத்தே தமிழ்நாட்டில் முதல்வர் ஆகி விடுகிறார்கள்.

ஆனால், 15 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் என்னால், அதுபோல் வெற்றி பெற முடியவில்லை” என்று அவர் விஜய்யின் பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்திருக்கிறார் பவன் கல்யாண்.

– வைஷ்ணவி பாலு