திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற 10-வது சர்வதேச அனிமே விருதுகள் வழங்கும் விழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக நடந்தது.
இதில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
விழா மேடையில் ‘பிளாக் பாந்தர்’ பட நடிகர் வின்ஸ்டன் டியூக் உடன் இணைந்து இந்த ஆண்டின் ‘சிறந்த அனிமேஷன்’ விருதை அவர் வழங்கினார்.
அந்த வகையில் சிறந்த அனிமே விருதை ‘சோலோ லெவலிங் சீசன் 2: அரைஸ் பிரம் தி ஷேடோ’ படம் வென்றது.
சர்வதேச அளவில் நடைபெறும் அனிமே விருதுகள் மேடையில் இந்திய நடிகை பங்கேற்று விருது வழங்கியது இதுவே முதல்முறையாகும்.
இது இந்திய சினிமாவுக்கு கிடைத்த ஒரு மாபெரும் அங்கீகாரமாகவும், கவுரவமாகவும் பார்க்கப்படுகிறது.
