1958-ம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி ‘தமிழ் புத்தாண்டு’ வெளியீடாக ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படம் வெளியானது. மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெள்ளிவிழாப் படமாகவும் ஆனது.
மைக்கேல் ஜாக்சன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாகவும், இவரது தோலில் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகள் காரணமாகவும் படங்களைத் தயாரிக்கும் எண்ணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம் தயாரிப்பாளர்களுக்கு.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை.
‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படப்பிடிப்பின்போது அன்றைய திருநெல்வேலி மாவட்டம், கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் எடுத்த இப்புகைப்படத்தில், சிவாஜி கணேசன், ம.பொ. சிவஞானம், பி.ஆர். பந்துலு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
"அது 1958-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். 'மாலையிட்ட மங்கை' படத்தில் எனக்கு ஜோடியாகக் காக்கா ராதாகிருஷ்ணன் நடித்தார். கண்ணதாசன் கதை, வசனம் எழுதித் தயாரித்த படம் அது" என ஆச்சி மனோரமா தெரிவித்துள்ளார்.
திமுக தலைவராக இருந்த கலைஞர் - அதிமுக பொதுச்செயலாளராக இருந்த செல்வி. ஜெயலலிதா, இருவருக்குமே பிடித்தமான படம் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் 1968-ம் ஆண்டில் வெளிவந்த 'தில்லானா மோகனாம்பாள்'.