Take a fresh look at your lifestyle.

பாலக்காட்டு மாதவன் நாயர் – இன்ஸ்பிரேஷன் யார்?

கே.பாக்யராஜ் விளக்கம்

“அந்த 7 நாட்கள் படத்திற்கான ஆரம்பகட்டத் துவக்கப் பணிகள் நடந்து கொண்டிருந்த நேரம்.
 
அப்போது பாடல் கம்போஸிங் நடந்து கொண்டிருந்தது.
 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் சார் மெய் மறந்து ட்யூன் போட்டுக் கொண்டிருந்தார்.
 
அதற்கு ரிதம் அடித்துக் கொண்டிருந்த பிரசாத் அவர்கள் ஆர்வக் கோளாறால் ஏடாகூடமாக வேண்டும் என்றே முத்தாய்ப்புகளைப் போட்டுக் கொண்டிருந்தார்.
 
மெல்லிசை மன்னர் நட்புரிமையுடன் அவரை மலையாளத்தில் நாலு ‘காய்ச்சு காய்ச்ச’ ஆரம்பித்தார்.
 
அதற்கு பிரசாத் சமாதானமாகத் தெலுங்கில் வேடிக்கையாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
இது அவர்களுக்குள் அவ்வப்போது உற்சாகத்திற்காக எழும் போலிச் சண்டை.
 
ஆனால், அந்த உரையாடல்.. வேறு மொழியில் பேசியபோது கிடைத்த ரசனை.. என் பேனாவைக் கூர்மையாக்கியது.
 
‘அந்த 7 நாட்களில்’ மாதவன் என்ற பெயர் கொண்ட காதலன் பாத்திரத்தை சான்ஸ் தேடும் மலையாள மியூசிக் டைரக்டராக மாற்றி விட்டேன்”
 
– 1981 ல் வெளிவந்த பேட்டி ஒன்றில் இயக்குநர் கே.பாக்யராஜ்.