இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘எஸ்கே 23’ படத்தை இயக்கி வரும் நிலையில், இந்தப் படத்தை முடித்துவிட்டு அவர் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிப்பில் உருவாக இருக்கும் ‘சிக்கந்தர்’ என்ற படத்தை இயக்க இருக்கிறார். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இந்தப் படத்தில் இரண்டு ஹீரோயின்கள் மற்றும் 3 வில்லன்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்தப் படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே சல்மான் கான் மற்றும் கரீனா கபூர் ஆகிய இருவரும் ‘தபாங் 2’ உட்பட சில படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.
மேலும் இந்தப் படத்தில் மூன்று மாஸ் வில்லன்கள் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒருவர் தமிழ் நடிகர் என்றும் மற்ற இருவர் பாலிவுட் நடிகர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு இந்தப் படம் வெளியாகவுள்ளது.
– தேஜேஷ்