Take a fresh look at your lifestyle.

‘விடாமுயற்சி’க்காக மீண்டும் அஜர்பைஜான் செல்லும் அஜீத்!

நடிகர் அஜித்குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் `குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் நாளையுடன் இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

இந்நிலையில், அஜித் `குட் பேட் அக்லி’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு செல்வாரா? அல்லது `விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்கு செல்வாரா? என்ற நிலையில் `விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் செல்ல உள்ளார்.

இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள படப்பிடிப்புக்காக அஜித் மற்றும் படக்குழுவினர் அஜர்பைஜான் செல்ல இருப்பதாகவும், அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்துடன் த்ரிஷா மற்றும் ரெஜினா ஆகிய இருவரும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருப்பதால் மூவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், ஸ்டண்ட் காட்சி மற்றும் ஒரு பாடல் காட்சி படமாக்க இருப்பதாகத் தெரிகிறது.

வரும் 20ஆம் தேதி முதல் அஜர்பைஜானில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் பிறகு சென்னை திரும்பும் அஜித், ‘குட் பேட் அக்லி’ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஜப்பான் செல்ல உள்ளார்.

அஜித், அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா, ஆரவ் உள்பட பலர் நடித்திருக்கும் `விடாமுயற்சி’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நீரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், அனிருத் இசையில் இந்த படம் உருவாகி வருகிறது.

– தேஜேஷ்