தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் ‘ஹேப்பிராஜ்’ படம் வெளியாகி இருந்தது.
ஜி.வி.பிரகாஷ் தற்போது வெக்கை என்ற படத்தில் நடித்துள்ளார்.
பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் டிவைன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்தை, அகிரன் மோசஸ் இயக்கியுள்ளார்.
சிவானி ராஜசேகர் கதாநாயகியாகவும், மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாஸி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
சுனில், மைம் கோபி, லிங்கேஷ், லிசா சின்னு, லட்சுமி பிரியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இசை: ஜி.வி.பிரகாஷ். ஒளிப்பதிவு: ரூபேஷ் ஷாஜி.
சமீபத்தில் படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.
அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் ஒரு சாலைத் தகராறை மையப்படுத்தியுள்ள இந்த போஸ்டர், படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
“அன்றாட வாழ்வில் சாதாரணமாக தோன்றும் சாலைத் தகராறுகளின் பின்னால் மறைந்திருக்கும் அகங்காரம், ஆத்திரம் மற்றும் அதன் எதிர்பாராத விளைவுகளே இதன் மையக்கரு” என்கிறார்கள் படக்குழுவினர்.