Take a fresh look at your lifestyle.

கொரிய சுற்றுலாவின் கவுரவத் தூதரான பிரியங்கா!

கொரிய நாட்டின் சுற்றுலாத் துறைக்கான கவுரவத் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெட்பிளிக்ஸில் வெளியான ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தில் கொரியாவில் பணிபுரியும் தன்னம்பிக்கை மிக்கப் பெண்ணாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார்.

இந்திய மற்றும் கொரிய நாட்டு ரசிகர்களிடம் இப்படம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கொரிய நாட்டு சுற்றுலாத்துறையின் கவுரவ தூதராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்காக கொரிய சுற்றுலா அமைப்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். நடிகை பிரியங்கா மோகன்,

தற்போது கவின் நடிப்பில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்திலும், வெற்றிமாறனின் ‘அரசன்’ படத்தில் சிலம்பரசன் ஜோடியாகவும், மாரி செல்வராஜ் இயக்கும் ‘மஞ்சணத்தி’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.