நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
பாலிவுட்டில் கலக்கி வரும் ஜான்வி கபூர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ‘தேவரா’ படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
தற்போது ராம் சரண் ஜோடியாக அவர் நடித்துள்ள ‘பெத்தி’ படமும் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் நுழையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தீபக் ரெட்டி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் துருவ் விக்ரம் ஜோடியாக ஜான்வி நடிக்கப் போவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கதாபாத்திரத்திற்காக முதலில் நடிகை ருக்மிணி வசந்த் பரிசீலிக்கப்பட்டதாகவும், பின்னர் சில காரணங்களால் அவர் விலகியதைத் தொடர்ந்து ஜான்வி கபூரை படக்குழு அணுகியதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.