Take a fresh look at your lifestyle.

இருட்டு உலகை மாற்றும் காதல் கதை!

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ என்ற தலைப்பில் புதிய படம் உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தை டி.அந்தோணி தயாரித்து, இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மும்பை மாடல் அழகி மதுமிதா தாஸ் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், நவ்யா,ஆலம்ஷா, மாதங்கி உள்பட பலரும் நடித்துள்ளனர்.

இசை: ஜோய் ரெடா, அசோக் ஸ்ரீதரன், ஜெய்கர் ஹரிநாத். ஒளிப்பதிவு: பீட்ரோ வில்லானி.

இந்த புதிய படம் குறித்து அந்தோணி கூறும்போது, “சிறுவயதிலேயே தாயை இழந்த கதாநாயகன் மது, மாது என இருட்டு உலகில் வாழ்க்கையை கழிக்கிறான். இந்த சூழலில் அவனது வாழ்க்கையில் காதல் நுழைகிறது.

அது அவனது வாழ்க்கையை புரட்டி போட்டதா? அவனது இருட்டு உலகை மாற்றியதா? என்பதே கதை.

சினிமா மீதான ஆசையால் என்ஜினீயரிங் படித்து அமெரிக்காவில் பார்த்துக்கொண்டிருந்த வேலையையும் விட்டுவிட்டு வந்தி ருக்கிறேன்.

காதலை புதுமையான பாணியில் சொல்ல நினைத்து முயற்சித்துள்ளேன். இது ஒரு மாறுபட்ட ரொமான்ஸ் – காதல் கதையாக இருக்கும். இது எனது முதல் படைப்பு.

இந்த படைப்பு அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஜூலை மாதம் படத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.