Take a fresh look at your lifestyle.

திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் என்ன தவறு?

நடிகை நிக்கி கல்ராணி ஆதங்கம்

‘டார்லிங்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, ‘மரகத நாணயம்’, ‘கலகலப்பு-2′, ‘தேவ்’ உள்பட பல படங்களில் நடித்துள்ள நிக்கி கல்ராணி, நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

தற்போது தமிழ், தெலுங்கில் படங்கள் நடித்து வரும் நிக்கி கல்ராணி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகைகளின் சினிமா பயணத்துக்கு திருமணம் முட்டுக்கட்டையா என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

“நடிகைகளுக்கு திருமணம் என்பது நிச்சயம் தடையாக இருக்காது. வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தால் பெரும்பாலான நடிகைகள் திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள்.

மலையாளம், தெலுங்கு, இந்தி சினிமாவில் திருமணத்துக்கு பிறகும் நடிகைகள் பலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் அந்த நிலை கொஞ்சம் கம்மி தான். எதிர்காலத்தில் அந்த நிலை மாறலாம் என்று நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.