‘ஜெயிலர்’ படத்தைப் பற்றி சொல்வதற்கு முன்னால், அதற்கு முந்தைய ஓரிரு செய்திகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
ரஜினிகாந்த் நடிக்க, சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ‘அண்ணாத்த’ படத்தை தயாரித்தது. படம் பெரிய அளவில் வசூலிக்கவில்லை.
அதே சன்பிக்சர்ஸ், அந்தச் சமயத்தில் விஜய் ஹீரோவாக நடித்த ‘பீஸ்ட்’ படத்தையும் தயாரித்தது. நெல்சன் திலிப்குமார் டைரக்டு செய்திருந்தார். இந்தப் படமும், வசூலில் சுமார் ரகமே.
இதையடுத்து சன் பிக்சர்ஸ், ரஜினி – நெல்சன் கூட்டணியில் ‘ஜெயிலர்’ படத்தைத் தயாரித்தது. இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பெரிய லாபத்தை பெற்று கொடுத்தது. 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
‘ஜெயிலர்’ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த் நடிக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தையும் நெல்சனே டைரக்டு செய்கிறார்.
இப்போது ரஜினி, லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். கூலி படத்தின் ‘ஷூட்டிங்’ கை முடித்துவிட்டு, ரஜினிகாந்த் ‘ஜெயிலர்-2 வில் இணைய உள்ளார்.
ஜெயிலர் படத்தில் கவுரவ வேடங்களில் தலைக் காட்டிய மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தில் தனுஷும், ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கு ரஜினி ஒப்புதல் வழங்கிவிட்டார். நெல்சனும் தனுஷுடன் பேச்சு நடத்தி உள்ளார். தனது மாமனார் ரஜினியுடன், மருமகன் தனுஷ் இணையும் முதல் படமாக ‘ஜெயிலர் -2′ இருக்கும்.
-பாப்பாங்குளம் பாரதி.
#அண்ணாத்த #Annaatthe #சன்_பிக்சர்ஸ் #Sun_pictures #பீஸ்ட் #Beast #ஜெயிலர் #Jailar #ரஜினி #Rajini #நெல்சன்_திலிப்குமார் #Nelson_dhilipkumar #ஜெயிலர்_2 #Jailar-2 #தனுஷ் #Dhanush #கூலி #Coolie #லோகேஷ்_கனகராஜ் #Lokesh_kanagaraj