Take a fresh look at your lifestyle.

தென்னிந்திய நடிகர் சங்கம் அன்று!

தென்னிந்திய நடிகர் சங்கம் சென்னையில் துவங்கப்பட்டதிலிருந்தே, அப்போது இருந்த பிரபல நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் டெக்னீஷியர்களிடம் என யாரிடமும் பாரபட்சம் இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது.

உதாரணத்துக்கு 1966-ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலைப் பாருங்கள்.

நடிகர் சங்கத்தின் தலைவராக எஸ்.எஸ்.ஆர், செயலாளராக எம்.ஜி.ஆர்., பொருளாராக டி.வி. நராயணசாமி, உபத் தலைவர்களாக எம்.வி. ரங்கநாதன், எஸ்.பி.சுந்தரம் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சேர்க்கைக் குழு உறுப்பினர்கள் பட்டியலில் கே.ஏ.தங்கவேலு, எஸ்.வி. சகஸ்ரநாமம், எல்.ஏ. அசோகன், எம்.என். நம்பியார், ஆர்.எஸ். மனோகர் ஆகியோரும், பெண்களில் எம்.பி. சுப்புலட்சுமியும், சி.டி. ராஜகாந்தமும், சாவித்ரியும், ஜி. சகுந்தலா என்று பெரிய பட்டியலே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பின்னணியில் இயங்கி இருக்கிறது.

ஆண்டுதோறும் ஆண்டறிக்கையும் சமர்பிக்கப்பட்டிருக்கிறது. நிர்வாக சபைக் கூட்டங்களும் நடந்திருக்கின்றன.

அடிக்கடி சங்கத்தின் உறுப்பினர்கள் கூடி வெவ்வேறு கலை நிகழ்ச்சிகளை நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காக நடத்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் தமிழ் சினிமா உலகம் வளர்ந்து கொண்டிருந்த நிலையில் தங்களுக்குள் பகைமையோ, உயர்வோ – தாழ்வோ பாராட்டாமல் சங்கத்தின் நலனைக் கருதில் கொண்டு இயக்கி இருக்கிறார்கள். சங்கத்தின் சார்பில் நடிகன் குரல் என்ற பத்திரிக்கையும் நடத்திருக்கிறார்கள்.

நலிவடைந்த திரைக் கலைஞர்களுக்கு காலத்திற்கேற்ற உதவிகளையும் செய்திருக்கிறார்கள்.

இப்படிப் பேருள்ளத்துடன் பலரின் பங்களிப்போடு செயல்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிலை எப்படி இருக்கிறது?

-யூகி.

#தென்னிந்திய_நடிகர்_சங்கம் #South_indian_Actors_Association #டி_வி_நராயணசாமி #TV_Narayanasamy #எம்வி_ரங்கநாதன் #MV_Ranganathan #எஸ்_பி_சுந்தரம் #SP_Sundaram #கேஏ_தங்கவேலு #KA_Thangavelu #எஸ்வி_சகஸ்ரநாமம் #SV_Sagasranamam #எல்ஏ_அசோகன் #LA_Ashokan #எம்என்_நம்பியார் #MN_Nambiar #ஆர்எஸ்_மனோகர் #RS Manohar #எம்பி_சுப்புலட்சுமி #MP_Subbulakshmi  #சிடி_ராஜகாந்தம் #CT_Rajakandham #சாவித்ரி #Savithri #ஜி_சகுந்தலா #G_Sakunthala #பட்டியல் #List