Take a fresh look at your lifestyle.

‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பில் நடிகர் பட்டாளம்!

பார்த்ததில் ரசித்தது:

முக்தா சீனிவாசன் 1929-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி தஞ்சாவூரில் வெங்கடச்சாரியார் – செல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

இளமைக் காலத்தில் பொதுவுடமைக் கட்சியால் ஈர்க்கப்பட்ட இவர், பிற்காலத்தில் தேசிய காங்கிரஸில் இணைந்தார். புகழ்பெற்ற பல்வேறு திரைப்படங்களை இயக்கியுள்ள முக்தா சீனிவாசன் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

ரஜினிகாந்த நடித்த பொல்லாதவன், ஜெயலலிதாவின் 100-வது படமான சூரியகாந்தி உட்பட தமிழில் 40 படங்களை இயக்கியுள்ள இவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார்.

முக்தா சீனிவாசன் இயக்கிய ‘முதலாளி’ படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான முக்தா சீனிவாசன் 2018 மே மாதம் 29-ம் தேதி காலமானார்.

குறிப்பு: ஒருமுறை ‘தவப்புதல்வன்’ படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கவிஞர் கண்ணதாசன், இயக்குநர் சி.வி. ராஜேந்திரன், தயாரிப்பாளரும் நடிகருமான பாலாஜி, நடிகைகள் பண்டரிபாய், ஏ.சகுந்தலா, காந்திமதி, கே.ஆர். விஜயா ஆகியோர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

– நன்றி: பிலிமாலயா சினிமா இதழ்.