Take a fresh look at your lifestyle.

விமல் பட ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்கும், போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சார்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே இப்படத்தின் டிரைலர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகி உள்ளது.

இந்த ‘சார்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி, படத்தின் இயக்குநர் போஸ் வெங்கட், விமல், நட்டி, சரவணன், சித்தார்த் விபின்தாஸ், ஹீரோயின் சாயாதேவி, பாடலாசிரியர் விவேகா, தயாரிப்பாளர் டி.சிவா, தனஞ்செயன் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘சார்’ படம் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#கிராஸ்_ரூட்_பிலிம்ஸ் #Grass_Root_Films #இயக்குநர்_போஸ்_வெங்கட் #Director_Bose_venkat #விமல் #Vimal #சார் #Sir #நட்டி #Natti #சரவணன் #Saravanan #சாயாதேவி #Sayadevi