Take a fresh look at your lifestyle.

தீரன் அதிகாரம் – 2 படத்தின் ஒப்பந்தம் கையெழுத்து!

நடிகர் கார்த்தியின் தீரன் அதிகாரம் – 2 திரைப்பட ஒப்பந்தம் கையெழுத்தானதாக படக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் படம், ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இதனிடையே, இயக்குனர் ஹெச் வினோத், நடிகர் கமலின் 233வது படத்தை இயக்கவிருந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் எப்போது என்பது உறுதியாகவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால் கார்த்தியின் தீரன் அதிகாரம் – 2 படத்தை இயக்க ஹெச் வினோத் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீரன் அதிகாரம் – 2 படத்துக்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளைத் தொடங்கிய வினோத், அடுத்தாண்டு படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

– தேஜேஷ்