Take a fresh look at your lifestyle.

டைட்டானிக்: மூழ்கிய கப்பல், மூழ்காத காதல்!

உலகப் புகழ்பெற்ற காதல் காவியமான ‘டைட்டானிக்’ திரைப்படம் வெளியான நாள் (19.12.1997) இன்று.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 1997-ம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி டோக்யோவிலும் அதே ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வெளியானது.

விமர்சனங்களுக்கும், பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கும் இடையே வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. அத்துடன் மிகச்சிறந்த திரைப்படத்திற்கான விருது உள்பட 11 ஆஸ்டர் விருதுகளை வென்றது.

பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட டைட்டானிக் சொகுசுக் கப்பல், அயர்லாந்தில் இருந்து பிரான்ஸ் வழியாக நியூயார்க் சென்ற தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறைகளில் (1912, ஏப்ரல் 15) மோதியது. இந்த விபத்தில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட டைட்டானிக் திரைப்படம் காதலையும் மிக அழுத்தமாகச் சொன்னதால் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.