Take a fresh look at your lifestyle.

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவு!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கம்

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’.  சுனில், ராதிகா உள்ளிட்டோரும் இதில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கிய உள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ வரும் 28-ம் தேதி வெளியாகிறது.

படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள்  நடந்து வருகின்றன். இது தொடர்பாக அண்மையில் சென்னையில் படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது.

அதில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியவை பேசுபொருளாகியுள்ளது.

“நான்  சினிமாவுக்கு  வந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்த போதிலும், கடலில் ஒரு துளி போல நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன். இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆசை. இன்னும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்ய ஆசைப்படுகிறேன்.

நிறைய கிண்டல்கள், கடினமான தருணங்களைத் தாண்டி வந்திருக்கிறேன்.

ஏஐ தொழில்நுட்பம் நல்ல வளர்ச்சி. ஆனால், அதனை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். எனது போட்டோ கூட மார்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. இங்கே தனி மனிதனின் பிரைவசி கேள்விக்குறியாகி விட்டது

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. அமெரிக்கா அல்லது துபாய் போன்ற நாடுகளுக்குச் சென்றால் அங்கு பாதுகாப்பு அதிகம்.

அங்கு சட்ட திட்டங்களே வேறு மாதிரி இருக்கும். அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் குறைவுதான். இது மாற வேண்டும்” என்று ஆதங்கப்பட்டார் கீர்த்தி சுரேஷ்.

– பாப்பாங்குளம் பாரதி.