‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யாவும் சவுந்தர்யாவும், சினிமாவில் ஏதாவது ஒரு தளத்தில் இயங்கிக் கொண்டே இருக்கிறார்கள். சவுந்தர்யா – டைரக்ஷன், தயாரிப்பு என இரட்டைப் பாதையில் பயணிக்கிறார்.
ஏற்கனவே மூன்று படங்களைத் தயாரித்துள்ள அவர், தயாரிக்கும் நான்காவது படம் ‘வித் லவ்’. ஜியோன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ளது.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடி அனஸ்வரா ராஜன்.
‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மதன், இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.
இந்தப் படத்தின் டைட்டில் டீசரை, ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுப் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.
‘வித் லவ்’ வெற்றி பெற ஆண்டவன் அருள் புரியட்டும் என ரஜினி குறிப்பிட்டுள்ளார்
ஷான் ரோல்டன் இசையமைக்க, ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
டீசர் வெளியாகும் முன்பே இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம், கணிசமான விலை கொடுத்து வாங்கியுள்ளது.
தியேட்டர்களில் ‘வித் லவ்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.