நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. பா.ரஞ்சித் டைரக்டு செய்துள்ளார். மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் கோலார் தங்கவயல் மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் வகையில் ‘தங்கலான்’ உருவாக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான படப்பிடிப்பு கோலார் தங்கவயலில் நடைபெற்றது. கொஞ்ச நாட்கள் சென்னையிலும் இதன் ஷுட்டிங் நடத்தப்பட்டது.
முதியவர் மற்றும் இளைஞர் என இரு வேறு வித்தியாசமான ‘கெட்டப்’களில் விக்ரம் நடித்துள்ளார்.
இந்தப் படம் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். ஆனால் இந்த நாளிலும் படம் ரிலீசாகாது என்று தெரிகிறது.
அந்த நேரத்தில் மக்களவை தேர்தல் நடக்க இருப்பதால், பட வெளியீட்டை ஜூன் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
‘துருவ நட்சத்திரம்’ போன்றே தங்கலான் ரிலீசும் தள்ளிப்போவதால், விக்ரம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
– பாப்பாங்குளம் பாரதி.