வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப் படத்தில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கிறார்.
அறிவியல் புனைக்கதையான இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரியும் சினேகாவும் விஜய் ஜோடியாக நடிக்கிறார்கள்.
இவர்கள் தவிர பிரசாந்த், பிரபுதேவா, ‘மைக்’ மோகன், ஜெயராம், பிரேம்ஜி, வைபவ், யோகி பாபு, ஆகாஷ், அஜ்மல், விடிவி கணேஷ், லைலா, பார்வதி நாயர் என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது.
‘கோட்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை இலங்கையில் படமாக்க முதலில் திட்டமிட்டிருந்தார், வெங்கட் பிரபு.
ஆனால் இப்போது கேரளாவில் படமாக்க முடிவு செய்துள்ளார்.
அங்கு ‘லொகேஷன்’ தேடும் பணியில் இயக்குநர் உள்ளிட்டப் படக்குழுவினர் ஈடுபட்டனர்.
அநேகமாக திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்டு மைதானத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படும் எனத் தெரிகிறது.
மே மாதம், இதன் ‘பர்ஸ்ட் சிங்கிள்’ வெளியாகும் என வெங்கட் பிரபு ஏற்கனவே அறிவித்துள்ளார்.
படத்தில் ஏராளமான ‘VFX’ மற்றும் ‘CGI’ காட்சிகள் சேர்க்கப்பட உள்ளதால், படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் முடிய சில மாதங்கள் பிடிக்கும்.
எனவே பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.
#இயக்குநர்_வெங்கட்_பிரபு #Director_Venkat_Prabhu #நடிகர்_விஜய் #Actor_Vijay #கோட் #GOAT #மீனாட்சி_சவுத்ரி #Meenatchi_Southri #சினேகா #Snekha #திருவனந்தபுரம் #Tiruvananthapuram #கிரீன்ஃபீல்டு #Greeenfield