Take a fresh look at your lifestyle.

விஜய் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்!

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படம் ‘THE GREATEST OF ALL TIME’ (கோட்). விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி என்ற புதுமுக நடிகை நடிக்கிறார்.

சினேகா, லைலா, வைபவ், நிதின் சத்யா, பிரேம்ஜி, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்து வருகிறது.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும், இந்தப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று இளமையான கதாபாத்திரம் என்பதால் அதனை டீ ஏஜிங் டெக்னலாஜியை பயன்படுத்தி உருவாக்குகின்றனர்.

‘கோட்’ படத்தில் விஜயகாந்தும் சில காட்சிகளில் தோன்றுகிறார்.

செயற்கை நுண்ணறிவு  (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விஜயகாந்தும், விஜயும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெற உள்ளது.

ஹேஸ்யமாக ஊடகங்களில் வெளியான இந்த தகவலை விஜயகாந்த் மனைவி பிரேமலதா உறுதிப்படுத்தியுள்ளார்.

‘கோட்’ படத்தில் கேப்டனை மறு உருவாக்கம் செய்ய இருப்பதாக வந்துள்ள செய்திகள் உண்மைதான்.

அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு என்னை சந்தித்து பேசினார். இது விஷயமாக முதலில் என் மகன் சண்முகபாண்டியனிடம் வெங்கட்பிரபு பேசியுள்ளார்.

அப்போது நான் தேர்தல் வேலைகளில் பிசியாக வெளியூரில் இருந்தேன். சென்னை திரும்பியதும், வெங்கட்பிரபு என் வீட்டுக்கு வந்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப முறையில் ‘கோட்’ படத்தின் கேப்டனை ‘ரீ-கிரியேட்’ செய்ய எனது அனுமதியைக் கேட்டார்.

நான் ஓகே சொல்லி விட்டேன். விஜய் மீதும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீதும் கேப்டனுக்கு அதீத அன்பு உண்டு. சந்திரசேகர் டைரக்ஷனில், கேப்டன் 17படங்களில் நடித்துள்ளார்’ என்றார், பிரேமலதா.

ஆரம்ப நாட்களில் விஜயை கிராமப்புறங்களில் யாருக்கும் தெரியாது. அவரை கிராமப்புறங்களில் கொண்டு போய் சேர்க்கும் வகையில், விஜய் நடித்த ‘செந்தூரப் பாண்டி’ படத்தில் விஜயகாந்தை நடிக்க வைத்தார் சந்திரசேகர்.

– பாப்பாங்குளம் பாரதி.