Take a fresh look at your lifestyle.

நாளை வெளியாகிறது ‘விடுதலை-2’ முதல் பார்வை!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானிஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘விடுதலை பாகம் 1’. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

காவல் துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இந்தப் படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்று தந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, மஞ்சு வாரியர், பாலிவுட் இயக்குநர் அனுராஜ் காஷ்யப், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1 வருடத்திற்கு முன்பாக வெளியான விடுதலை முதல் பாகத்தை பார்த்து மகிழ்ந்த ரசிகர்கள், இரண்டாம் பாகத்தை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், விடுதலை பாகம் 2 படத்தின் அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (17-07-24) காலை 11:30 மணியளவில் வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தில், அரிவாளை சுத்தியால் அடிப்பது போல் காட்சியமைத்து, கம்யூனிஸ்ட் சின்னத்தை பிரதிபலிப்பது போல் தெரிகிறது.