Take a fresh look at your lifestyle.

மகிழ்ச்சியான இடத்தில் எல்லாம் நீ இருப்பாய்!

இயக்குநர் வெங்கட் பிரவு நெகிழ்ச்சி

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான மறைந்த பவதாரிணியின் பிறந்தநாளையொட்டி அவரது அண்ணனான இயக்குநர் வெங்கட் பிரபு உருமான பதிவை பகிர்ந்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், பவதாரிணியின் பிறந்தநாளையொட்டி அவரது சகோதரரும் இயக்குநருமான வெங்கட் பிரபு, பவதாரிணியுடன் எடுத்துக்கொண்ட கடைசிப் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், மகிழ்ச்சியான இடத்தில் நீ இருப்பாய் என தெரியும் என்றும், மிஸ் யூ எனவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

– தேஜேஷ்