Take a fresh look at your lifestyle.

‘வா வாத்தியார்’: எம்.ஜி.ஆர். ரசிகராக கார்த்தி!

கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்தராஜ், கருணாகரன், உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘வா வாத்தியார்’.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரிக்க, நலன் குமாரசாமி எழுதி இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வரும் 12 ஆம் தேதி வெளியாகிறது.

எம்.ஜி.ஆர், ரசிகராக கார்த்தி நடித்துள்ள இந்தப் படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘அன்பே வா’ படத்தில் இடம்பெற்ற ‘ராஜாவின் பார்வை, ராணியின் பக்கம்’ என்ற பாடலை தனது தாயாருடன் இணைந்து ரீமிக்ஸ் செய்து சந்தோஷ் நாராயணன் பாடியிருக்கும் பாடல் இணையதளங்களில் வைரலாகியுள்ளது.

பாடலைக் கேட்டு, சந்தோஷ் நாராயணனின் தாயாருக்கு கார்த்தி, தேவிஸ்ரீ பிரசாத், விஜய் யேசுதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 – பாப்பாங்குளம் பாரதி.