Take a fresh look at your lifestyle.

நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த த்ரிஷா!

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை வேடத்தில் நடித்த பிறகு த்ரிஷா காட்டில் அடைமழை. அதன்பிறகு தொடர்ச்சியாக பல பிரபலங்களுடன் இணைத்து நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளத்தைப் பார்க்கும்போது அவர்தான் தென்னிந்திய திரையுலகில் நம்பர் ஒன் நடிகை என்பது தெரிய வந்துள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக்லைஃப்’, சிரஞ்சீவி நடித்து வரும் ‘விஸ்வாம்பரா’, மோகன்லால் நடித்து வரும் ‘ராம்’, நிவின் பாலி நடித்து வரும் ‘ஐடென்டிட்டி’ மற்றும் அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ என பிரபலங்களுடன் த்ரிஷா தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

அது மட்டுமின்றி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளதாகவும், ஒரு சிறு வேடத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யுடன் ‘லியோ’ படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா ரூ.5 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது ‘தக்லைஃப்’ படத்திற்காக ரூ.12 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.

இதிலிருந்து நயன்தாராவை பின்னுக்குத் தள்ளிவிட்டு அவர் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

தென்னிந்தியாவின் நம்பர் ஒன் நடிகையாக த்ரிஷா இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.

– தேஜேஷ்

#த்ரிஷா #பொன்னியின்_செல்வன் #தக்_லைஃப் #கமல்ஹாசன் #சிரஞ்சீவி #விஸ்வாம்பரா #மோகன்லால் #ராம் #நிவின்_பாலி #ஐடென்டிட்டி #அஜித் #விடாமுயற்சி #கோட் #நயன்தாரா