Take a fresh look at your lifestyle.

தூக்குதுரை – வன்முறை இல்லாத படம்!

டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய எடிட்டர் ஸ்ரீதர், ‘படத்தில் இயக்குநர், தயாரிப்பாளர்களுடன் பணிபுரிந்து விடலாம். ஆனால், இந்த மேடை கொஞ்சம் கஷ்டம் தான். எங்களுக்கு மேடையில் பேச கன்டென்ட் இல்லாமல் இல்லை.

எனக்கும் இயக்குநருக்கும் நடக்கும் அந்த மேஜிக் ட்ரிக்கை இங்கே சொல்லிவிட்டால் படத்தில் சுவாரஸ்யம் இல்லாமல் போய்விடும். அந்த மேஜிக் டிரைய்லரில் இருந்தது போல, நிச்சயம் படத்திலும் இருக்கும். திரையரங்குக்கு வந்து படத்தை பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

இந்நிகழ்வில் பேசிய டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், “‘தூக்குதுரை’ படத்தின் மூலம் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மகேஸ் கதாநாயகனாக அறிமுகமாகி இருக்கிறார். மகேஸ் என்னுடய டான்ஸ் கிளாஸ் மாணவர். எதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அவருடைய இந்த முயற்சிக்கு வாழ்த்துகள்.

தயாரிப்பாளர்கள் அரவிந்த், அன்பு, வினோத் என மூன்று பேருமே எங்களுக்கு நிறைய ஆதரவு கொடுத்தார்கள்.

படத்திற்கான புரோமோ பாடல் சிரிக்க சிரிக்க நல்ல கான்செப்ட்டோடு வந்திருக்கிறது. படமும் நன்றாக வந்திருக்கிறது.

சென்றாயன், பாலசரவணன் இந்தப் பாடலில் குழந்தைகளுக்குப் பிடித்தபடி ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!

நடிகர் மகேந்திரன் பேசியபோது, “சின்ன வயதில் இருந்து கடந்த 30 வருடங்களாக தமிழ் சினிமாவை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிற மொழியில் உள்ளவர்கள் நம் தமிழ் சினிமாவை பெரிதாக பார்க்கிறார்கள்.

இங்கு பெரிய படங்களுக்குத்தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்குப் அதிக திரையரங்குகளோ, நல்ல டைமிங்கோ கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. அதில் நிறைய நடிகர்கள் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்.

பெரிய படங்கள் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நல்லக் கதைகள் கொண்ட சின்ன பட்ஜெட் படங்களை வருடத்திற்கு இரண்டாவது தயாரிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ஸ்ரீனிவாஸ் சார் சொன்னதுபோல அந்த 90% தயாரிப்பாளர்கள்தான் எல்லா மொழி சினிமாவையும் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அதனால், தயவுசெய்து தியேட்டர் கொடுத்து படத்தை வெற்றிப் பெற வையுங்கள்”.

இந்த படத்தை பற்றி பேசிய நடிகர் மகேஸ் சுப்ரமணியன், “இந்த மேடை எனக்கு 15 வருட கனவு. இந்தப் படம் எனக்கு முதல் படம். எனக்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் மூன்று பேருக்கும் நன்றி. சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவனை நம்பி சினிமாவில் வாய்ப்புக் கொடுத்திருந்தார்கள். பல போராட்டங்களைத் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் டெனிஸ் மஞ்சுநாத், “படத்தை பிப்ரவரி 9 அன்று வெளியிட திட்டமிட்டோம். ஆனால், அதன் பிறகு நிறைய பெரிய படங்கள் இருக்கிறது என்பதால், சீக்கிரமாக எடுத்த முடிவு தான் இந்தப் பட ரிலீஸ். அதனால், படத்தில் உள்ள முக்கிய நடிகர்கள் பலரால் இன்று நிகழ்வுக்கு வரமுடியவில்லை.

எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் குடும்பத்தோடு ஜாலியாக வந்து படம் பார்க்கலாம். மல்டி ஸ்டார்ஸ் வைத்து படம் எடுப்பது கடினமானது இல்லை என என் படக்குழு எனக்கு சொல்லிக் கொடுத்துள்ளார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படம் ஜனவரி 25 அன்று வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்” என்றார்.