Take a fresh look at your lifestyle.

90களில் தமிழ் சினிமாவில் ஒலித்த வித்தியாசமான குரல்!

அர்ஜீனரு வில்லு, தைய தையா, கிட்ட நெருங்கி வாடா, லக்கி லக்கி, சலாம் குலாமு, நதியே அடி நைல் நதியே, நான் சால்ட் கோட்டா, ஜோதி நெறஞ்சவ, சிலோனு சிங்கள பெண்ணே என்ற வித்யாசமான குரலை 90-களில் கேட்காமல் இருந்திருக்கவே முடியாது.

அந்தக் குரல்களுக்கு இருவர்தான் சொந்தக்காரர்கள். ஒருவர் உதித் நாராயண், மற்றொருவர் சுக்வீந்தர் சிங். சுக்வீந்தர் சிங் பாலிவுட் பாடகர். இவர் ஸ்லம் டாக் மில்லனியர் படத்தில் “ஜெய் ஹோ” என்ற பாடலைப் பாடியுள்ளார்.

அந்தப் பாடல் பெஸ்ட் ஒரிஜினல் பாடலுக்காக அகாடமி விருது வென்றது. சிறந்த பாடலுக்கான கிராமி விருதையும் பெற்றது.

சுக்வீந்தர் சிங் ‘உயிரே’ படத்தின் தைய்ய தைய்யா பாடலையும் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் பாடலை, சப்னா அஸ்வதியுடன் சேர்ந்து பாடியிருப்பார். பாடல் தமிழ் மற்றும் இந்தி இரண்டு மொழிகளிலும் படு ஹிட்.

இவர் பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிஸ்டரைச் சேர்ந்தவர். முண்டா சௌத்தால் என்ற பஞ்சாபி ஆல்பம் பாடியுள்ளார்.

இவரது இசைக்குழு இசைக் கச்சேரிகளை நடத்தி வந்தது. அப்போதுதான் அவருக்கு தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தியில் ஆஜா சனம் என்ற பாடலையும், ஹாக்கி உலகக் கோப்பை பாடலையும் பாடியுள்ளார்.

‘தில்சே’ படத்திற்கு சுக்வீந்தர் சிங் பாடிய சைய்யா சைய்யா (தமிழில் தைய்ய, தைய்யா) பாடல் இவருக்கு புகழைப் பெற்றுத்தந்தது. இந்தப் பாடலுக்கு சிறந்த பிண்ணனிப் பாடகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது.

ஹவுலே, ஹவுலே என்ற பாடலுக்கும் இவருக்கு விருது கிடைத்தது. இதேபோல், பிண்னணிப் பாடகருக்கான தேசிய விருதும் இவருக்குக் கிடைத்துள்ளது. சுக்வீந்தர் சிங்கின் வித்யாசமான குரல் பலரையும் ஈர்ப்பதாக இருந்தது. 

90-களில் பிரபலமான சுக்வீந்தர் சிங்குக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே தமிழ் சினிமாவில் இருந்தது என்றால் அது மிகையாகாது.

அவர் தன்னுடைய இயல்பு குறித்து வார இதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் ஒரு பகுதி.

இசையைத் தவிர நீங்கள் பயிற்சி செய்யும் ஒன்று?

நகைச்சுவை, எனக்கு மக்களை சிரிக்க வைப்பது ரொம்பப் பிடிக்கும்.

உங்களிடமிருந்து இசையைக் கற்றுக்கொள்ள உங்களிடம் உள்ள அனைத்தையும் கொடுக்க உங்கள் ரசிகர் ஒருவர் தயாராக இருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று உண்மையிலேயே உணர்கிறேன். பாரம்பரிய இசையைக் கற்றுக்கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடித்து வருகிறேன்.

இருப்பினும், இதேபோன்ற ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒருவரின் இதயத்தை நான் ஒருபோதும் உடைக்க மாட்டேன். இதுவரை நான் பாடுவது பற்றி சேகரித்த சிறிய அறிவைக் கொண்டு அவருக்கு வழிகாட்ட விரும்புகிறேன். அனுபவப் பரிமாற்றத்தைப் பொருள் விஷயங்களுடன் நான் பண்டமாற்று செய்வதில்லை.

நன்றி: முகநூல் பதிவு