Take a fresh look at your lifestyle.

கார்த்தி படத்தில் ஸ்ரீதிவ்யா!

96 திரைப்பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் அவரது 27-வது திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில், கதாநாயகியாக சீரியல் நடிகை சுவாதி கொண்டேவும், வில்லனாக நடிகர் அரவிந்த் சாமியும் நடித்து வருகின்றனர்.

படத்தின், படப்பிடிப்பு 80 சதவீத நிறைவடைந்த நிலையில் காரைக்குடியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கார்த்தியின் சகோதரி கதாப்பாத்திரத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காற்று வெளியிடை திரைப்படத்திற்கு பின் இப்படமும் சின்க் சவுண்ட் முறையில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

– தேஜேஷ்