தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் `எஸ்கே23’ படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் ஏற்கனவே `அமரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அந்தப் படத்தின் தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகிறது.
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இதனிடையே சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் ஏற்கனவே சூரி நடித்து வரும் `கொட்டுக்காளி’ என்ற படத்தைத் தயாரித்து வரும் நிலையில் தற்போது `குரங்கு பெடல்’ என்ற படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்தப் படம் குறித்த டைட்டில் வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவின்படி இந்தப் படத்தை இயக்குபவர் கமலக்கண்ணன் சுப்பிரமணியன் என்றும், இந்தப் படத்தில் ஜிப்ரான் இசையமைக்க இருக்கிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க குழந்தை நட்சத்திரங்கள் நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெருமை சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– தேஜேஷ்
#நடிகர்_சிவகார்த்திகேயன் #Actor_Sivakarthikeyan #இயக்குநர்_ராஜ்குமார்_பெரியசாமி #Director_Rajkumar_Periyasamy #அமரன் #Amaran #கொட்டுக்காளி #Kottukkali #குரங்கு_பெடல் #Kurangu_petal #கமலக்கண்ணன்_சுப்பிரமணியன்