தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”.
இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் எழுத்தில் பங்களித்த அந்தோணி பாக்யராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.
பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, திரைப்படக் குழுவினர் கலந்துகொள்ள ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி: இந்தப் படத்தில் எமோஷன் மிக முக்கியம். அதைத் திரையில் கொண்டுவருவது முக்கியம். ஜீவி தான் பண்ணனும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒத்துக்கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த மியூசிக் டைரக்டர்களில் ஒருத்தர் ஜீவி.

இந்தப் படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி சரியாக இருப்பார் என்று நினைத்தோம். அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி.
கனி அண்ணனுக்கு இன்னும் ஒரு முக்கியமான பாத்திரம். நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துக்கள் சொல்பவர், அவரை அதற்கு நேர்மாறாக நடிக்க வைத்துள்ளோம்.
இயக்குநரின் உழைப்பு தான் படம் வெற்றிபெறக் காரணம்.
யோகிபாபுவும் நானும் டிவின்ஸ் மாதிரி ஒன்னாவே இருந்தோம். கோமாளி படம் மாதிரி இந்தப் படத்திலும் அழகான டிராவல்.
தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார், ஒரு ஆம்புலன்ஸ் சைரனுக்கும், போலீஸ் சைரனுக்கும் உள்ள போராட்டம் தான் இந்த சைரன் படம்.
எப்போதும் வித்தியாசமான கேரக்டர்களில் அசத்தும் ஜெயம் ரவி இந்தப் படத்திலும் அசத்தியுள்ளார். என் மருமகன் என்பதால் கூறவில்லை. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும்.
இந்தப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். நந்தினி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் அட்டகாசமாக நடித்துள்ளார்.
இந்தப் படம் அவர் நடிப்பு வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும்.
ஜெயம் ரவிக்கு இணையாக எதிர்த்து நிற்க, அவரால் முடியுமா என முதலில் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்காக 5 கிலோ எடைகூட்டி அந்த போலீஸ் உடையில் கச்சிதமாக இருந்தார். அற்புதமாக நடித்துள்ளார்.
சமுத்திரக்கனி எல்லா பாத்திரங்களிலும் எல்லா மொழிகளிலும் அசத்துகிறார். இந்தப் படத்திலும் நன்றாக நடித்துள்ளார். யோகி பாபு படம் முழுக்க வருகிறார். அவர் நடிப்பு பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன்.

அழகம் பெருமாள், அஜய், துளசி மேடம், சாந்தினி இன்னும் பலர் நடித்துள்ளனர். அனுபமா பரமேஸ்வரன் ப்யூட்டிஃபுல்லான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஜீவி அருமையான நான்கு பாடல்கள் தந்துள்ளார்.
கேமராமேன் செல்வகுமார் அவ்வளவு அற்புதமான விஷுவல்கள் தந்துள்ளார்.
திலீப் மாஸ்டர் சண்டைக் காட்சிகள் நன்றாக எடுத்துள்ளார்.
படத்தில் எல்லோரும் தங்கள் உயிரை தந்து உழைத்துள்ளனர். எனக்கு முதலில் சொன்னது காமெடி கதை. ரவியிடம் தான் இந்தக் கதையைச் சொன்னார். சொன்ன மாதிரி நன்றாக படத்தை எடுத்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் செல்வகுமார்: மாநகரம் படத்திற்குப் பிறகு முழுக்க முழுக்க இரவில் நடக்கும் கதையில் வேலை செய்கிறேன். டைரக்டர் அந்தோணி கதை சொல்லும் போதே சுவாரஸ்யமாக இருந்தது. அவரிடமிருந்து இப்படி ஒரு கதையை எதிர்பார்க்கவில்லை. படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எல்லாமே இருக்கும்.
எனக்குப் பிடித்த படி எடுத்திருக்கிறேன். எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். இந்த வருடத்தின் தமிழில் மிக முக்கியமான படமாக இப்படம் இருக்கும்.
இயக்குநராகும் அந்தோணியின் கனவு இந்தப் படத்தில் நிறைவேறியுள்ளது.
இயக்குநர் அந்தோணி பாக்யராஜ்:
இந்தப் படத்தில் உழைத்த அனைவருமே தங்கள் படம் போல வேலை செய்தார்கள். கீர்த்தி அற்புதமாக நடித்துள்ளார்.
அனுபமாவிற்கு முக்கியமான ரோல். தமிழில் இது அவங்களுக்கு முக்கியமான படமாக இருக்கும்.
