Take a fresh look at your lifestyle.

மென்குரலால் மனதைக் கவர்ந்த ஸ்வேதா மோகன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் பாடிவரும் ஸ்வேதா மோகனின் குரலுக்கு ரசிகர்கள் தனி இடம் கொடுத்துள்ளனர்.

இவருடைய அழகான குரலில் வெளியாகும் பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இவர் பாடிய ரசிகர்களின் மனதைக் கவர்ந்த டாப் 5 பாடல்களின் தொகுப்பு.

மெர்சல்:

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஸ்வேதா மோகன் பாடிய ‘உன் ஹார்ட்க்குள்ள நான் பிரைவேட் ஆயிட்டேன்’ இந்த பாடல் 5-வது இடத்தை பிடித்துள்ளது.

3:

தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவான 3 படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்று இருந்த ‘இது போதுமா இதில் அவசரமா’ பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்தார் இப்பாடல் 4வது இடத்தை பிடித்துள்ளது.

மரியான்:

ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘மரியான்’ திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘இன்னும் கொஞ்ச நேரம் பொறுத்தா தான் என்ன’ பாடலை ஸ்வேதா மோகன் பாடியிருந்த நிலையில் இப்பாடல் 3வது இடத்தை பிடித்துள்ளது.

தங்க மகன்:

தனுஷ், சமந்தா நடிப்பில் வெளியான ‘தங்க மகன்’ படத்திற்கு அனிருத் இசையமைத்தார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ‘என்ன சொல்ல, ஏது சொல்ல’ பாடலை ஸ்வேதா மோகன் பாடிய நிலையில் இப்பாடல் 2வது இடத்தை பிடித்துள்ளது.

அம்பிகாபதி:

ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அம்பிகாபதி’ படத்தில் இடம் பெற்றிருந்த ‘இக்கலா ரசிகா’ பாடலை பாடியவர் ஸ்வேதா மோகன் தான் இப்பாடல் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.