நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த ஆண்டு எந்தப் படமும் வரவில்லை. நேற்று தனது 42 – வது பிறந்தநாளைக் கொண்டாடிய சிம்பு, தான் நடிக்க உள்ள புதிய படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
மணிரத்னம் இயக்க, கமல்ஹாசனுடன் சிம்பு நடிக்கும் ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5ஆம் தேதி ரிலீசாகிறது.
இதனைத் தொடர்ந்து டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் புது படத்தில் சிம்பு நடிக்கிறார். இது சிம்புவுக்கு 49 வது படம். இதனைப் ‘பார்க்கிங்’ படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
தனது 50 வது படத்தை அவரே தயாரிக்கிறார். சிம்பு புதிதாக அட்மன் சினி ஆர்ட்ஸ் என்கிற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் முதல் படத்தைத் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இது சரித்திர படமாக உருவாகிறது. சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
சிம்பு – தேசிங்கு பெரியசாமி கூட்டணியில் ஒரு படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தார்.
அது, பெரிய பட்ஜெட் என்பதால் கைவிடப்பட்டது. அந்தப் படத்தைத்தான், தனது சொந்த நிறுவனம் மூலம் சிம்பு தயாரிக்கிறார்.
சிம்பு நடிக்கும் 51 வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை ‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து, டைரக்ட் செய்கிறார்.
– பாப்பாங்குளம் பாரதி.