பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத் படங்களை இயக்கிய S.U.அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘சித்தா’. சித்தப்பா – மகள் இடையேயான உறவைப் பேசும் இப்படம் நாளை ( செப்டம்பர் – 28) திரைக்கு வருகிறது.
பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும் படத்திற்கான பாடல்களை திபுநிணன் தாமஸும் உருவாக்கி உள்ளனர். இந்நிலையில் படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகி இருக்கிறது. இந்த டிரெய்லரை சமூக வலைதளங்களில் நடிகர் சூர்யா வெளியிட்டார்.
– தேஜேஷ்