Take a fresh look at your lifestyle.

‘தேவர் மகன்’ படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி!

73

‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்துத் தயாரித்த படங்களில் முக்கியமானது ‘தேவர் மகன்’. படம் நன்றாக ஓடியதால் இதன் மீதான விமர்சனங்களுக்கு குறைச்சல் இல்லை. 

தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் நிகழ்ந்ததற்கு ‘தேவர் மகன்’ ஒரு முக்கிய காரணியாக இருந்ததாக ஒரு குற்றச்சாட்டு உண்டு.

இந்தப் படத்தில் பெரிய தேவர் என்ற வேடத்தில் சிவாஜி கணேசன் நடித்திருப்பார். இந்தக் கேரக்டரில் நடிக்க முதலில் சிவாஜி தயக்கம் காட்டியுள்ளார்.

பெரிய தேவர் வேடத்தில் நடிக்க சிவாஜியிடம் நேரில் சென்று கமல் கதை சொல்லியுள்ளார்.

அதற்கு சிவாஜி, “வேண்டாம்… கதை எனக்குப் பிடிக்கவில்லை.. நான் நடிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

உடனே கமல் “நீங்கள் நடிக்கவில்லை என்றால் இந்தப் படத்தை நான் எடுக்க மாட்டேன்’’ என்று கூறிவிட்டார்.

நடிகர் திலகத்தை அவரது மகன்கள் பிரபுவும், ராம்குமாரும் சேர்த்து நடிக்க வற்புறுத்தினர். அதன் பிறகே அவர் நடிக்க ஒற்றுக்கொண்டார்.

தேவர்மகன் படத்தில் நடிக்க சிவாஜி கொடுத்த கால்ஷீட் நாட்கள் எத்தனை தெரியுமா >
வெறும் 7 நாட்கள்.

– பாப்பாங்குளம் பாரதி.