Take a fresh look at your lifestyle.

வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் ஷாலினி பாண்டே!

விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக் குவிந்து வருகிறது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகிய இருவருக்கும் மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டைக் கொடுத்தது.

இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து ஷாலினி பாண்டே சில தெலுங்குப் படங்களிலும் இந்திப் படங்களிலும் நடித்த நிலையில் தமிழிலும் அவர் ‘100% காதல்’, ‘சைலன்ஸ்’ உள்ளிட்டப் படங்களில் நடித்தார்.

தற்போது அவர் ‘மகாராஜா’ என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஷாலினி பாண்டேவுக்கு கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில், அதில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்து வருகிறார்.

இதையடுத்து சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.