‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ போன்ற படங்களை இயக்கிய அட்லி, இந்தியில் ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ படம் பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. உலகம் முழுவதிலும் ரூ.1000 கோடி வசூலைத் தாண்டியது.
அடுத்து விஜய், ஷாருக்கான் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்க இருப்பதாக அட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஜவான் பட சூட்டிங் சென்னையில் நடந்தபோது, ஷாருக்கானும், விஜய்யும் சந்தித்துப் பேசினார்கள்.
அப்போது என்னிடம் உங்களுக்கு இரண்டு ஹீரோவை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இருந்தால், நாங்கள் அதற்கு ரெடி என்று ஷாருக்கான் தெரிவித்தார். விஜய்யும் ‘ஆமாம்ப்பா’ என்று கூறினார்.
இது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது. எனவே இப்போது அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
சொல்லப்போனால், இது என் அடுத்த படமாகக் கூட இருக்கலாம்.
எனவே நிச்சயம் இரண்டு பேரையும் வைத்து ரூ.3 ஆயிரம் கோடி வசூல் ஈட்டும் வகையில் பெரிய படம் எடுக்க விரும்புகிறேன். இருவருமே எனக்கு முக்கியமானவர்கள்தான் என்றார்.
விஜய், ஷாருக்கான் இணைந்து நடிக்கும் படம் பற்றிய தகவல் இருதரப்பு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.
