வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘கோட்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோட் படப்பிடிப்பின்போது, படப்பிடிப்புத் தளத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
இதை அறிந்த நடிகர் விஜய் அங்கிருந்த வாகனத்தின் மீது ஏறி நின்று, ரசிகர்களைப் பார்த்து கையசைத்ததுடன், தனது ரசிகர்களுடன் செல்ஃபி புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார்.
இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
– தேஜேஷ்