Take a fresh look at your lifestyle.

ரீ ரிலீசுக்குத் தயாரான ‘குஷி’, ‘சிவகாசி’!

கடந்த ஆண்டு புதிய படங்களுக்கு இணையாக ரீ – ரிலீஸில் வசூலை அள்ளிய படம் ‘கில்லி’. இந்தப் படத்தை ஏ.எம். ரத்னம் தயாரித்திருந்தார்.

ரீ-ரிலீஸ் விநியோக உரிமையைப் பெற்று வெளியிட்டார் சக்திவேலன். தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

தற்போது ‘கில்லி’ படத்தைத் தொடர்ந்து, ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ ஆகிய படங்களையும் வெளியிட திட்டமிட்டுள்ளார், அந்தப் படங்களின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்.

இந்த இரண்டு படங்களுமே விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமானவை. குஷி படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார்.

சிவகாசி படத்தை, பேரரசு டைரக்டு செய்திருந்தார். இரு படங்களும் அவர்கள் இயக்கிய இரண்டாவது படம். அறிமுக இயக்குநர்களின் இரண்டாவது படம் ஜெயிப்பது அபூர்வம். எஸ்.ஜே. சூர்யாவும், பேரரசுவும் விஜய் மூலம் ஜெயித்து காட்டினர்.

‘குஷி’ படத்தின் பாடல்கள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல் ‘சிவகாசி’ படமும் வணிக ரீதியாக பெரிய வெற்றியை விஜய்க்குக் கொடுத்தது.

ஏ.எம். ரத்னம் இப்போது ‘ஹரிஹர வீர மல்லு’ என்ற தெலுங்கு படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்திற்கான வெளியீட்டுப் பணிகளில் அவர் பிசியாக இருக்கிறார்.

அதனை முடித்துவிட்டு, ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படங்களை ரத்னம் விரைவில் ‘ரீ-ரிலீஸ்’ செய்ய உள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி.