நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரெக்கார்ட் பிரேக்’ படம் எட்டு மொழிகளில் மார்ச் 8 மகளிர் தினத்தன்று வெளியாகிறது. ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில், நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது! இதில் பேசிய நடிகர் நிஹார், “இது என்னுடைய இரண்டாவது படம். கடந்த ஐந்து வருடங்களாக இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளோம். விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.
அடுத்து பேசிய தயாரிப்பாளரும் நடிகருமான பிரசன்னா குமார், “அம்மா செண்டிமெட்ண்ட் மற்றும் விவசாயிகள் பிரச்சினையும் இதில் பேசப்பட்டுள்ளது.
ரெஸ்லிங்கில் எப்படி ஹீரோ போட்டிப் போட்டு, சீனா, பாகிஸ்தான் வீரர்களை ஜெயிக்கிறான் என்பதுதான் ‘ரெக்கார்ட் பிரேக்’.
‘பிச்சைக்காரன்’ படம் வெளியான சமயத்தில் விஜய் ஆண்டனிக்கு தெலுங்கில் பெரிதாக மார்க்கெட் இல்லை. ஆனால், கதை மீது நம்பிக்கை கொண்டு ‘பிச்சக்காடு’ என பெயர் வைத்து அங்கு வெளியிட்டார். படம் தமிழை விட தெலுங்கில்தான் சூப்பர் ஹிட் ஆனது” என்றார்.